15 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி 94% செயற்திறன் கொண்டது என ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொவிட் பரவலை தடுப்பதற்கு மொடர்னா தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட காலப்பகுதிக்கு இடையிலான வித்தியாசம் 28 நாட்களாக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்