யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை- வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை), 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்