சூழகம் அமைப்பினால் ஊரதீவு , கேரதீவில் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு

 .
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்  ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்  புங்குடுதீவு  ஏழாம் வட்டாரம் ஊரதீவு பகுதியிலும் , ஐந்தாம் வட்டாரமான  கேரதீவு பகுதியிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இப்பகுதிகளில் வாழ்கின்ற  பொதுமக்களின்  வேண்டுகோளுக்கிணங்க  மயானங்களை சூழ்ந்து காணப்பட்ட பற்றைக்காடுகளும் , வீதிகளின் அருகில் காணப்பட்ட பற்றைக்காடுகளும்  பெக்கோ இயந்திரம் ஊடாக ரூபாய் 70000 செலவில்  அகற்றப்பட்டன . அத்தோடு பொதுமக்களின் பாவனைக்காக கிணறொன்று அமைக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது .
மேற்படி சிரமதானப்பணிகளுக்காக சுவிஸ் வாழ் புங்குடுதீவு  உறவுகளான  திரு . நவரத்தினம் சிவானந்தன் ( சிவா ) மற்றும் திருமதி ஆனந்தி சுரேஷ் ஆகியோரின் நிதியுதவியில்  மேற்கொள்ளப்பட்டிருந்தன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்