வவுனியா வாசியைக் காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு உறவுகள் வேண்டுகோள்!

வவுனியா கோவில்குளம்
பகுதியில் வசித்துவந்த முதியவர் ஒருவரை காணவில்லை என அவரது
குடும்பத்தினரால் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடொன்று
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 66 வயதான அன்ரன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுகவீனமடைந்திருந்த குறித்த முதியவர், வீட்டிலிருந்து வவுனியா மருத்துவமனைக்கு செல்கின்றேன் என தெரிவித்து சென்றுள்ளார். எனினும் பலநாள்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் பயணித்த

மோட்டார் சைக்கிள் யாழ். நல்லூர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 077 8934 366, 077 9588 590 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டுதகவல் வழங்கியுதவமாறு உறவினர்களினால் கோரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்