டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம்

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களின் தளர்வு என்பது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்கானது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாட்டை காலவரையின்றி மூடி வைப்பதனால் எவ்வித பயனும் இருக்காது என சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு உரிய முறையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமோ இறுக்கமான கட்டுப்பாடுகள் மூலமாகவோ தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அது பொருளாதாரத்தை வலுப்படுத்தாது என்றும் கூறினார்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை சாதகமாக எண்ணி மக்கள் அலட்சியத்துடன் செயற்பட்டால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்ய தவறினால் அது பேரழிவு தரும் சூழ்நிலையில் முடிவடையும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.