முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் விடுவிப்பு

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரடங்கிய குழுவினர் 16.07.2021நேற்று இரவு 09.00மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கேப்பாபுலவு விமானப்படை முகாமிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு. பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கொரோனா சுகாதார வழிகாட்டல்களை காரணம் காட்டி தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரை தனிமைப்படுத்தினர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்க  என்பன ஆர்ப்பாட்டங்ளையும் மேற்கொண்டிருந்தன.

இந்த நிலையில்,முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து கொண்டு ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை எட்டாவது நாளாக மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.