நோய்வாய்ப்பட்டு காட்டுயானை ஒன்று உயிரிழப்பு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பிரிவில், பெரியகுளம் வயல்வெளியில் நோய்வாய்ப்பட்டிருந்த காட்டுயானைஒன்று [17]இன்று உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் காட்டுயானை ஒன்று நோய்வாய்ப்பட்டு வயல்வெளியில் வீழ்ந்தநிலையில்
காணப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவரசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியரும், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோத்தர்களும் நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை வழங்கியிருந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்துள்ளது.

யானை நோய்வாய்ப்பட்டமை தொடர்பாக மேலதிக பரிசோதனைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்