கல்முனைப்பிராந்தியத்தில் மூன்று பேர் கொரோனாவால் மரணம்

கடந்த 24மணிநேரத்தில் கல்முனைப்பிராந்தியத்தில் மூன்று பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். 65 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர் என்று கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றுப்பிரதேசத்தைச் சேர்ந்த 70 மற்றும் 74வயதுடைய இருவரும் பொத்துவிலைச் சேர்ந்த 94 வயது வயோதிபரொருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

பொத்துவில் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களில் 170 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இறுதியாக நடாத்திய அன்ரிஜன் சோதனையின்போது 23 பேர் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொத்துவில் 9 (குண்டுமடு) கிராமசேவையாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ளது.

அதனால் இந்த பொத்துவில் 9ஆம் பிரிவை (குண்டுமடு) முடக்குவதற்கு நாம் தேசிய கொவிட் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளோம். இன்றோ நாளையோ இராணுவத்தளபதியின் முறையான அந்த அறிவித்தல் வரும் என்றார்.
.
எனவே பொத்துவில் 13 ஆம் கிராமசேவையாளர் பிரிவு தேசிய கொவிட் செயலணியால் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு 9ஆம் பிரிவும் முடக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக பொத்துவில் பிரதேசத்தின் சிலபகுதிகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருவதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளா டாக்டர் குண.சுகுணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்