மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும் இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், மேலும் 245 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 50 ஆயிரத்து 994 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த 293 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்