விசேட சுற்றிவளைப்பு, 3,909 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுமார் 14 ஆயிரம் காவற்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் வெவ்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 909 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.” இவ்வாறு காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த விசேட சுற்றிவளைப்பில் மதுபானம் அருந்திய நிலையில் 580 பேரும், போதைப்பொருட்களுடன் 1,250 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 645 பேரும், குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த 98 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்