நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மனோ அணி ஆதரவு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று(19) ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்தநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்