துமிந்த சில்வா விடுதலை; நீதிமன்றம் சென்ற ஹிருணிகா!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிராக, உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை அரசியலமைப்புக்கு விரோதமாக அறிவிக்கக் கோரி ஹிருணிகா அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் முன்வைத்த உத்தரவை இரத்து செய்யு மாறும் ஹிருணிகா பிரேமச்சந்திர உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.