கிழக்கில் இந்திய முதலீட்டை வலுப்படுத்த யோசனை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டை ஊக்குவிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மக்களின் நலன்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையை கிழக்கு மாகாணத்தில் வலுவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்