சிறுமி பற்றிய விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

தனக்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தலைமையிலான குழுவை இன்று நியமித்திருக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்