யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும் முதியவர் இதய நோய் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண காவல்துறையினரினால் முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை இடம் பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்