காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது

[நூருல் ஹுதா உமர்]

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் அல்- ஜலால் பாடசாலைக்கு முன்னாலும் இன்று காலை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதம பொலிஸ் பரிசோதகர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், ஆலய பரிபாலன சபையினர், மதகுருமார்கள், கிராம சேவகர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பௌத்த, இஸ்லாமிய, ஹிந்து மதகுருமார்களின் ஆசியுடன் இந்த பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளின் நினைவாக அதிதிகளினால் மரக்கண்டுகள் நடப்பட்டதுடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.