படுகொலை அரசே பாதக அரசே நீ தண்டிக்கப்படுவாய்…!

 

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்தகாலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை அரசே தண்டிக்கப்படுவாய். நீதி ஒருநாள் தலைநிமிரும், கொலைகார்கள் தண்டிக்கப்பட வேண்டும், சுநிர்ணய உரிமை தமிழர்களிற்கும் உண்டு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன்,கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்