வீட்டருகே கஞ்சா புதைத்து வைத்திருந்த இளைஞன் வசமாக மாட்டினார்!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் ரூ .30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டன.

கடற்படையினின் ரோந்து அணியை கண்ட ஒருவர் அருகிலுள்ள புதருக்குள் போதைப்பொருளை மறைத்து விட்டு தப்பிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில், அந்த பகுதியில் 16 பொட்டலங்களில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் அந்த பகுதியிலுள்ள வீடொன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 24 பொதி கஞ்சா மீட்கப்பட்டது.

சந்தேகநபரிடன் 107.840 கிலோகிராம் எடையுள்ள 40 பார்சல் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் முள்ளியான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபருடன் கஞ்சா பொதிகளும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.