புதிய மாகாணப்பணிப்பாளராக அலியார் நியமனம்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண – அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.பி. அலியார் நியமிக்கப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டு பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில், தனது இளமானிப் பட்டத்தை  பெற்றுக்கொண்ட இவர், 2002  ம் ஆண்டு இலங்கை பொறியியல் நிறுவனத்தில் தொழில்சார் பட்டய பொறியியலாளராக இணைந்து கொண்டதுடன், 2010 ம் ஆண்டு இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் திட்ட முகாமைத்துவதில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினைப் பூர்த்தி செய்தார்.
கடந்த 1996 ம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைந்து கொண்ட இவர், 1997 முதல் 2009 ம் ஆண்டு வரை நிறைவேற்றுப் பொறியியலாளராகவும், 2009 – 2021 மார்ச் மாதம் வரை பிரதம பொறியியலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இதன் பின்னர் கடந்த மூன்று மாதங்களாக பதில் மேலதிக மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில், கடந்த 20 ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் அக்கரைப்பற்று  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளராக நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாகாணப்பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வு இன்று (22), அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பாறை பிரதம பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், நிறைவேற்று பொறியியலாளர்களான ரி. சிவசுப்ரமணியம், எம்.ஐ. ஏ. சஜீர், விமுதி லக்மால், பொறியியலாளர்கள் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கல்முனையை வசிப்பிடமாகக் கொண்டவருமான இவர், நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாயாலயம் மற்றும் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்