ஹிஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)

அட்டனில் இன்றும் (24.07.2021) சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் அட்டன் புட்சிட்டிக்கு முன்பாக காலை 11 மணியளவில் ஆரம்பித்து நடைபாதையாக அட்டன் நகரத்துக்கு வந்தடைந்து அட்டன் மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாக கோசத்துடன் நீதி வேண்டி கோசமிட்டபடி முடிவுசெய்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் யுவதிகள் மத பேதமின்றி கட்சி பேதமின்றி சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்