தென்னிலங்கையில் புகழாரம் சூட்டப்பட்டு வருகின்ற நீதிபதி இவர்தானாம்!

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தென்னிலங்கையில் மீண்டும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

மனிதாபிமானமற்ற சமூகத்தில் மீண்டும் மீண்டும் பிரகாசிக்கப்படும் தமிழரான நீதிபதி இளஞ்செழியனின் மனிதநேயம் மாறியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகம் இளஞ்செயழின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மெய்பாதுகாவலரான சரத் ஹேமசந்திர என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

சரத் ஹேமசந்திர உயிரிழந்து 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் சிலாபத்தில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

உயிரிழந்த ஹேமசந்திரவின் கல்லறையில் விளக்கேற்றி, வழிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குடும்பத்தாருடன் தானம் வழங்கவும் நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழந்த பின்னர் அவரது பிள்ளைகள் இரண்டினையும் தனது பிள்ளைகளாக கருதும் நீதிபதி, அவர்களின் கல்வி நடவடிக்கைகளு்ககு உதவி செய்து வருகின்றார்.

ஹேமசந்திர உயிரிழந்த தினத்தன்று அவரது மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட மனிதநேயமிக்க நீதிபதி இளஞ்செழியன் தற்போது திருகோணமலை நீதிபதியாக செயற்படுகின்றார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை பேஸ்புக்கில் நீதிபதியை வாழ்த்தி தென்னிலங்கை சேர்ந்த பலரும் பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.

அந்த பதிவில், உண்மையான மனிதன். கல்லறையில் வணங்கி விட்டு மாத்திரம் செல்லாமல் பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் செயலுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இலங்கை சிறந்த மனிதாபிமான உள்ள இந்த மனிதனுக்கு எங்கள் மரியாதை எப்போதும் உண்டு என பதிவிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.