இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு அஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு பழைய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

 

இதன்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், பிரதமரின் பெருந்தோட்டங்களுகான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

அத்துடன் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் அமரர் சௌமிய மூர்த்திதொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செதுத்தப்பட்டது. இந்நிகழ்வில், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்