மட்டக்களப்பில் தலை கீழாக புரண்ட மோட்டார் கார்!

மட்டக்களப்பு நகரின் மணிக்கூடுக் கோபுர சந்தியிலே கார்கள் இரண்டு மோதி, இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார்களில் ஒன்று மல்லாக்க புரண்டு, பலத்த சேதமடைந்துள்ளது.

இந்தக் காரில் பயணித்தவரே படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றுள்ள பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார், மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்