யாழின் அழகிய கடல் நீரேரி கச்சாய்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் அமைந்துள்ளது.

இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் கடல்நீரேரி ‘சேத்துக்கடல்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லமுடியும் . அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றது.

இங்கிருந்து கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தகாலப்பகுதியில் யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவரத்துப் பாதையாக அமைந்திருந்தது.

ஈழப்போராட்ட வரலாற்றில் இக்கடல்நீரேரி பெரும் பங்கு வகித்ததோடு. 1990 இருந்து 1995 வரை யாழ்ப்பாணத்து மக்கள் தென்னிலங்கை செல்வது என்றால் இதன் ஊடாகத்தான் பூநகரி நல்லூர் என்னும் இடத்துக்கு சென்று, அதில் இருந்து பரந்தன் வழியாக ஏ9 நெடுஞ்சாலையை அடைந்து தென்னிலங்கைக்குச் செல்வார்கள்.
இந்தக் கடல் நீரேரியின் அதிகூடிய ஆழம் நான்கு மீட்டர்கள். இப்பகுதி ‘கிளாலி’ என்று அழைக்கப்படும். கச்சாய் பகுதியில் இருக்கும் இந்த கடல் நீரேரியின் ஆழம் பொதுவாக ஒரு மீட்டர் இருக்கும்.கச்சாய் துறைமுகத்திலிருந்த நான்கு கிலோமீற்றர் தென்கிழக்கு திசை, அதிலிருந்து நான்கு கிலோமீற்றர் தெற்கு திசை, அதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக தென்மேற்கு திசை பதினெட்டு கிலோமீற்றர் சென்றால் பாக்குநீரினையில் இணையலாம்.

 

நன்றி

படைப்பு – செல்வம் கஜந்தன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்