கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற  பக்தர்களில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆலய திருவிழாவில் பங்கேற்ற 179 பேரிடம்  எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், 49 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆலய திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லையென கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கரவெட்டி தெற்கு கிராமத்திலேயே அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், அப்பகுதியை தனிமைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்