இஷாலினியின் இறப்பிற்கு நீதிகோரி விஸ்வமடுவிலும் ஆர்ப்பாட்டம் 

[விஜயரத்தினம் சரவணன்]


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட, விஸ்வமடு,ரெட்பான சந்தியில் மலையகச் சிறுமி இஷாலினியின் இறப்பிற்கு நீதிகோரி 27.07.2021 இன்று கண்டனஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த மலையகச் சிறுமி இஷாலினியின் இறப்பிற்கு நீதி கோரியதுடன், சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ் பிரையோகத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கும் தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

அத்தோடு பணிக்கமர்த்தப்படும் வயதெல்லையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆர்பாட்டக்காரர்களால் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இது தொடர்பில் ஜனாதிபதிக்குரிய மஜர் கையளிக்கப்பட்டதுடன், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்