முல்லைத்தீவில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் காயம்

முல்லைத்தீவில் சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் அருகிலே சென்று மனைவியும் மகனும் உப்பு அள்ளிக் கொண்டிருந்த போது கணவன் அருகில் உள்ள பற்றைக்காடுகளில் விறகு வெட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்

இந்நிலையில் காலை எட்டு முப்பது மணி அளவில் குறித்த குடும்பஸ்தர் விறகு வெட்டியபோது மரத்தடியில் இருந்த வெடிபொருள் மீது கோடாரி மோதி குண்டு வெடித்துள்ளது

இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்