அமெரிக்காவின் பொருளாதார தடைபட்டியலில் சிக்கிய இலங்கை!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை இன்றையதினம் தெரிவித்துள்ளது.

குளோபல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி அமெரிக்காவினால் இவ்வாறு இலங்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

தன்னிச்சையான மீளாய்வை செய்தல் என்ற கருத்தை வைத்து அமெரிக்கா இதர நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் அந்த டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, சீனா உட்பட 27 நாடுகள் இந்த பொருளாதாரத்தடை பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்