ஆலையடிவேம்பு தெற்கு வங்கியானது நடமாடும் ஒன்லைன் சேவை

அம்பாரை மாவட்;டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு வங்கியானது நடமாடும் ஒன்லைன் சேவையினூடாக பொதுமக்களுக்கான கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை இன்று ஆரம்பித்தது.
சமுர்த்தி அபிவிருத்;தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறியின் அறிவுறுத்தலுக்கமைய சமுர்த்தி வங்கிகள் யாவும் ஒன்லைன் மூலமான நடவடிக்கையினை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள நிலையில் அதனையும் தாண்டி நடமாடும் ஒன்லைன் சேவை மூலமாக மக்கள் காலடிக்கு சேவையினை கொண்டு செல்லும் திட்டத்தினையும் ஆலையடிவேம்பு தெற்கு வங்கி முன்னெடுத்துள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலின் கீழ் வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இன்று அலிக்கம்பை கிராமத்தில் இடம்பெற்ற ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவையில் வங்கி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் திட்ட முகாமையாளர் எஸ்.சுரேஸ்காந் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.ரவிச்சந்திரன் வங்கிச்சங்க உதவி முகாமையாளர் வி.சுகிர்தகுமார் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆர்.ஜெயராம் வங்கி காசாளர் மு.தெய்வேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கொடுப்பனவை வழங்கி வைத்தனர்.

 

இன்று மாத்திரம் சுமார் 100 பயனாளிகள் இதன் மூலம் பணத்தினை பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு சுமார் 16 கிலோமீற்றருக்கும் அப்பால் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்கள் நன்மையடைந்ததுடன் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்த பிரதேச செயலாளர் வங்கி முகாமையாளர் உள்ளிட்ட  அனைவருக்கும் குறித்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதேநேரம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் தானியங்கி பணபரிமாற்று சேவை (ATM) இயந்திரத்தை அரசாங்கம் தமது பிரதேசத்திற்கும் பெற்றுக்கொடுக்குமேயானால் அரசுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்பதுடன் விசுவாசமுள்ளவர்களாகவும் இருப்போம் என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்