நிந்தவூர் வைத்தியசாலையில் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

[நூருல் ஹுதா உமர்]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (28) மதியம் வைத்தியசாலை முன்றலில் முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சரை விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியவாறு சமூக இடைவெளிகளை பேணி சுகாதார வழிமுறைகளுடன் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய முன்மொழிவுகளை முன்வைத்த தாதிகள் தங்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்