பரந்தனில்  குடிநீர் சுத்திகரிப்பு செயன்முறைக்கான திரவக் குளோரின் உற்பத்தி!!!

பரந்தனில் அமைந்துள்ள பழைய இராசயனத் தொழிற்சாலைக் காணியை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனிக்கு வழங்கல்

கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனம்,

தனது பிரதான வர்த்தக நடவடிக்கையாக,

குடிநீர் சுத்திகரிப்பு செயன்முறைக்குத் தேவையான திரவக் குளோரினை இந்தியாவிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் இறக்குமதி செய்து,

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு விநியோகித்து வருகின்றது.

மேற்படி நிறுவனம், உள்நாட்டிலேயே சோடியம் ஐதரொட்சைட் மற்றும் குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன்,

ஐதரோகுளோரிக் அமிலம், பொலிஅலுமினியம் குளோரைட் மற்றும் சோடியம் ஹயிபோ குளோரயிட் போன்றவற்றையும்,

மேற்படி கருத்திட்டத்தின் பிரதி உற்பத்திகளாக உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளது.

மேற்படி கருத்திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடியவாறு –

பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும்,

1954 ஆம் ஆண்டு தொடக்கம் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான காணியை,

மேற்படி நிறுவனத்திற்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.