பேரிடர்காலம் மக்களுக்கு நல்ல படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளன! கல்முனையில் அம்பாறைமாவட்ட மேலதிகஅரசஅதிபர் ஜெகதீசன்

பேரிடர்கள், அனர்த்தங்களை எதிர்கொள்வதென்பது கஸ்டம்தான். எனினும் அத்தகைய இக்கட்டான காலங்களில் அவை மக்களுக்கு நல்ல படிப்பினைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை.அவை ஏனையோருக்கு உதவும் நல்ல மனிதபண்புகளை ஏற்படுத்தியுள்ளன.


இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கல்முனையில் ஒருதொகுதி சுகாதாரநலன்பேணும் பொருட்களை வழங்கிவைத்துரையாற்றுகையில் தெரிவித்தார்.


யுஎஸ்எய்ட் ஸ்தாபன நிதியுதவியில் அம்பாறை மாவட்ட சிவில் சமுகஅமைப்புகளின் சம்மேளனம் ,மாவட்டத்தில் 10சிறுவர்சிறுமியர் இல்லங்கள் மற்றும் கொவிட் நிலையத்திற்கு சுகாதாரநலன்பேணும் பொருட்களை வழங்கிவருகிறது.

அந்தவகையில் கல்முனை மெதடிஸ்த சிறுமியர் இல்ல மாணவிகளுக்கு 39தொகுதி உபகரணங்கள், சிவில்சமுக சம்மேளன மாவட்ட இணைப்பாளர் வ.பரமசிங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று(27) செவ்வாயக்கிழமை இல்லமண்டபத்தில் இடம்பெற்றது.


நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ,இல்லபொறுப்பாளர் அருட்சகோ சுஜிதர் சிவநாயகம், முன்னாள்அதிபர்களான வ.பிரபாகரன், கே.ஜீவகடாட்சம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இணைப்பாளர் எ.எல்.அஸார்தீன், இணையஇணைப்பாளர் ஜ.எல்.எம். இர்பான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யுஎஸ்எயிட் ஸ்தாபனத்தின் நேரடிபங்குதாரர்களான மனித எழுச்சி நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம் சார்பில் இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

அங்கு மேலதிக அரசஅதிபர் மேலும் பேசுகையில்:


சுனாமி மற்றும் சமகால கொரோனா அனர்த்தங்கள் எமக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளன.நல்லபழக்கவழங்கங்களுடன் கூடிய மற்றவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய வாழ்க்கைக்கோலங்களை மாற்றித்தந்துள்ளன. இப்படிப்பட்ட காலங்களில் கஸ்டங்களைபகிர்ந்துகொண்டு ,இனமதபேதமற்று நாம் உதவிசெய்யவேண்டும். கடந்தவாரம் நாம் தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்இல்லத்திற்கு மடிகணணி வழங்கியிருக்கிறோம்.


இடர்காலங்களில் உதவிசெய்வதற்கு பாக்கியம் செய்திருக்கவேண்டும் .அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. உதவிசெய்ய அப்படிப்பட்ட வாய்ப்பு கிட்டியிருப்தும் இறைவனின் அருளே எனலாம். எமது சமுகஆர்வலர் சகா கொரோனாக்காலங்களில் பல லட்சருபா பெறுமதியான உலருணவுகளை வழங்கிய அனுபவம் உண்டு. தமது இன்னுயிரையும் துச்சமென மதித்து ,இத்தகைய உதவிகளை செய்யும்போது இறைவனை நெருங்குகின்றோம்.

வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . கொரோனா 3வது அலை இன்று தாண்டவமாடுகின்றது. தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்றிக்கொள்ளவேண்டும்.

சிறுமியர் இல்லத்தை நடாத்துவதென்பது எளிதான காரியமல்ல. பல விமர்சனங்களைத்தாண்டி நடாத்தவேண்டிய நிலை. இருந்தபோதிலும் இத்தகைய இல்லங்களிலிருந்து வெளியேறும் சிறுமியர் நல்லபழக்கவழக்கங்களுடன், நல்ல பண்புகளுடன் ஒழுக்கசீலர்களாக சமுதாயத்தில் இணைவதைக்கண்டிருக்கிறோம்.

அப்படி வெளியேறும் அந்த பெண் ஆளுமைகள் தம்மைவளர்த்த இத்தகைய இல்லங்களை திரும்பிப்பார்க்கவேண்டும். நீங்கள் வாழ்ந்த, வாழ்வைஅளித்த  இல்லத்திற்கு உதவவேண்டும்.
விரைவிலே கொரொனா என்கின்ற ஆட்கொல்லி நோயிலிருந்து விடுபடவேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் அவதானமாக சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.