அம்பாறை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஜத் தாண்டியுள்ளது

அம்பாறை மாவட்டத்தில் இருபெரும் சுகாதாரப்பிரிவுகள் உள்ளன. அவை அம்பாறைப்பிராந்தியம் மற்றும் கல்முனைப்பிராந்தியம் என்பனவாகும்.

இவற்றில் கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 68மரணங்களும் அம்பாறைப்பிராந்தியத்தில் 35 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதாவது இதுவரை கொரோனாவால் 103பேர் மரணித்துள்ளனர்.

கல்முனைப்பிராந்தியத்தில் ஏற்பட்ட 68மரணங்களுள் அதிகூடிய 9மரணங்கள் கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவிலும், 10மரணங்கள் சம்மாந்துறை பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

அடுத்ததாக சாய்ந்தமருது மற்றும்  அக்கரைப்பற்று பிரிவுகளில் தலா  7மரணங்களும், அட்டாளைச்சேனை ,நிந்தவூர் மற்றும் காரைதீவுப் பகுதிகளில் தலா 6மரணங்களும், இறக்காமப்பகுதியில் 5மரணங்களும் ,ஆலையடிவேம்புபகுதியில் 4மரணங்களும் ,பொத்துவில் மற்றும் கல்முனை வடக்கு பகுதியில் தலா 3மரணங்களும் சம்பவித்துள்ளன.

இறுதியாக கல்முனை அஷ்ரப் ஆதாரவைத்தியசாலையில் கல்முனை தெற்கைச்சேர்ந்த 71வயதான நபரொருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக இதுவரை ஒரு மரணமும் பதியப்படாத தனியொரு பிரதேசமாக திருக்கோவில் சுகாதாரவைத்திய அதிகாரிப்பிரதேசம் மிளிர்கிறது.

இதேவேளை அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய தொற்று கடந்த இருநாட்களில் இடம்பெற்றுள்ளது.நேற்று மட்டும் 188பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் 3695தொற்றாளர்களும், அம்பாறைப்பிராந்தியத்தில் 2601 தொற்றாளர்களும்  இனங்காணப்பட்டுள்ளனர்..

அதனால் அம்பாரைக்கு  14ஆயிரம் தடுப்பூசிகள் நேற்றுமுன்திம் மேலதிகமாக வழங்கப்பட்டது..அதேபோல் ,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 31ஆயிரம் ஊசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கல்முனைக்கு 50ஆயிரம் வக்சீன்களும் ,அம்பாறைக்கு 62315வக்சீன்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்