காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு,கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வீதியை மறித்து, வீதிக்குக்கு குறுக்காக அமர்ந்திருந்தும், முகாமின் பிரதான படலையை மறித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், பாதுகாப்பு நலன்கருதி, அங்கு பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அப்பகுதிக்கு, நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகைதந்தபோது,  , அமைதியின்மை ஏற்பட்டது.

வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்தே மக்களும் அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்