கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்படுத்தலில்!

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்தே, தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து கைத்தொழில் அமைச்சில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமைச்சின் வழக்கமான செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்