சாவகச்சேரியில் ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியர் உயிரிழப்பு !

சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

திருமணம் செய்து சில வருடங்களான நிலையில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தீடிரென தலையில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

புற்று நோய் தாக்கம் அதிகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்

இச் சம்பவத்தில் பாலசுப்பிரமணியம் செந்துரன்[ வயது 32 ] என்ற ஒரு பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tamilcnn குழுமத்தின் சார்பில் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னார் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்