பிள்ளைகளை ஒப்படையுங்கள்! யாழ்.ஐ.நா உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக போாராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 வருடங்களுக்கு மேலாகியும் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சர்வதேசத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தில் தான் தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் என்றும் சர்வதேசம் தான் இதற்கு தீர்வு கூற வேண்டும் என்றும் காணாமல்போன தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளை தெரிவித்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

இனிமேலும் தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தான் கடலினுள் மூழ்கி உயிரை விடுவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த சில காலங்களாக கொரோனா வைரசின் தாக்கத்தினால் ஒவ்வொரு 30ஆம் திகதியும் மேற்கொள்கின்ற போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும் இதன்போது குறிப்பிட்டனர்.

குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்