ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி ஹட்டனில் ஆர்பாட்டம்

(க.கிஷாந்தன்)

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு சந்தியில் இன்று (01) காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உரிமையை பாதுகாப்போம், சட்டத்தை நசுக்காதே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம், போன்ற வாசகங்கள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்