யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இன்று  கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக செயற்பட்ட பாலச்சந்திரன், சூரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அ இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கு முன்னர் கண்டியில் இந்திய உதவி உயர்ஸ்தானியராக பணிபுரிந்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்