வருடங்கள் 15 ஆகியும் கிடைக்காத நீதி!!

 

மனிதாபிமான பணியாளர்களிற்கு எதிரான ஈவிரக்கமற்ற படுகொலையொன்றில் -பிரான்சை சேர்ந்த அக்சன் பார்ம் ( ஏசிஎவ்) அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்த 17 இலங்கை பணியாளர்கள் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி திருகோணமலை மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் படுகொலைசெய்யப்பட்டனர்.

தங்கள் நிறுவனத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்த பணியாளர்களை முழங்காலில் இருத்தி அவர்கள் தங்கள் உயிர்களிற்காக மன்றாட செய்த பின்னர் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொன்றனர்.

மூதூரை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கங்கத்திற்கும் இடையில் பல நாட்கள் இடம்பெற்ற மோதலின் பின்னர் இந்த படுகொலை இடம்பெற்றது.

ஏசிஎவ் அமைப்பின் பணியாளர்கள் 2004 ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

15 வருடங்கள் கடந்த நிலையில் எவரும் பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை.

பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகள் மீது இந்த படுகொலைகளிற்கான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர், எனினும் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர்கள் குழுசாட்சிகள்மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்த பகுப்பாய்வுகள் என்பனவற்றை அடிப்படையாக வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.

இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நேரடி காரணம் எனஇந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனை மூடி மறைத்ததில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கும் நீதித்துறை அதிகாரிகளிற்கும் தொடர்புள்ளது என படுகொலையின் பத்தாவது வருடத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச மனித உரிமைகண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஏசிஎவ் விவகாரம் உட்பட 16 முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக 2006 இல் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலமளித்த ஏசிஎவ் பணியாளர்களின் குடும்பத்தினர் தாங்கள் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்,

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளில் பாரிய தலையீடுகள் காணப்படுவதாக தெரிவித்து ஆணைக்குழுவின் சர்வதேச நிபுணர்கள் 2008 இல் பதவி விலகினார்கள்,2015 செப்டம்பர் வரை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியாகவில்லை,என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

கொலை குற்றவாளிகள் யார் என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்த ஜனாதிபதி ஆணைக்குழு, படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரையும் கடற்படையினரையும் விடுவித்ததுடன்,புலிகள் அல்லது முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் அவற்றை நடத்தியிருக்கலாம் என தெரிவித்திருந்தது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில்தெரிவித்திருந்தது.

அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் என காத்திருந்து விரக்தியடைந்த ஏஎவ்சி 2013 இல் தனது முழு அறிக்கையை வெளியிட்டிருந்தது- தன்னிடமிருந்த ஆதாரங்களை பகிரங்கப்படுத்தியிருந்ததுடன் படுகொலை செய்யப்பட்ட தனது சக பணியாளர்களிற்கு நீதியை கோரியிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் – சாட்சிகள் இராஜதந்திர தரப்பினர் மற்றும் ஏனைய தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் காணப்பட்டன.

17 மனிதாபிமான பணியாளர்களும் இலங்கை படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.இலங்கையின் உயர் அதிகாரிகள் – குற்றவாளிகளை காப்பாற்றியிருக்கவேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கைஇராணுவத்தினர் கடற்படையினர் பொலிஸார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் சுயாதீன விசாரணைகள் தனிநபர் வாக்குமூலங்களுடன் ஆரம்பமாவதுடன் படுகொலைக்கு பின்னர் ஆதாரங்களை அழிப்பதற்கு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கின்றது.

கொலையாளிகள் நீதியிலிருந்து தப்புவதற்கு உதவிய விசாரணையின் பல பலவீனங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதுடன் தண்டனையிலிருந்து விலக்களிப்பதில் இலங்கையின் உயர் அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்பையும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

2006 ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் திகதி நியுயோர்க் டைம்சில் வெளியான கட்டுரை இலங்கையின் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு படையினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது.

மூன்று விடயங்களை அடிப்படையாக வைத்து தனது முடிவை அது தெரிவித்துள்ளது. முதலாவதாக பாதுகாப்பு படையினர் படுகொலை இடம்பெற்றவேளை மூதூரில் காணப்பட்டனர் என யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது,இரண்டாவதாக உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு கண்காணிப்பு குழுவினரை அரசாங்கம் அனுமதிக்கவில்லை,மூன்றாவதாக மிகமுக்கியத்தும் வாய்ந்த தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட மிகவும் இரகசியமான உரையாடலின் போது பாதுகாப்பு படையினரே காரணம் என தெரிவிக்கப்பட்டதாக யுத்தநிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

அந்த படுகொலைகைள மேற்கொள்ளும் நிலையில் வேறு எந்த குழுவும் இல்லை என யுத்தநிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை,லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட நீதி இன்னமும் நிலைநாட்டப்படாத உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவங்களில்ஒன்று என தெரிவிக்கப்படும் இந்த படுகொலைகள் குறித்த விசாரணைகள் பற்றி இறுதியாக 2019 ஜூன் 13 ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்துஅறிய முடிந்தது.
அன்று அப்போதைய சட்டமா அதிபர் இந்த வழக்கு உட்பட மூன்று சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

தாமதங்கள் பொதுமக்களிற்கு மன உளைச்சலை அளித்துள்ளதால் நான்கு சம்பவங்களையும் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபரைஇது குறித்து அறிக்கையிடுமாறு அவர் கேட்டிருந்தார்.
இரண்டு வருடங்களி;ன் பின்னர் இன்னமும் விசாரணைகள் இடைநடுவில் நிற்கின்றன.

சமீபத்தைய டுவிட்டர் பதிவில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்-நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக- பொறுப்புக்கூறலையும் மனித அபிவிருத்தியையும் உறுதி செய்வதற்காக நாங்கள் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம்,பல அவசியமான நிறுவன சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் நாங்கள் நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக பிரச்சினைகளிற்கு நீதி மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு தீர்வை காண தயாராக உள்ளோம் என குறிப்பிட்டிருந்தார்.

சொன்னபடி செயறபடுவதற்கான தருணம் இது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.