இந்து ஆலய கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார்! நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்?

 

இந்து ஆலய கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார்!
நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்?

வரலாற்று புகழ்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்று முக்கியத்தை பறைசாற்றும் புனித ஆலயமாக கருதப்படும் இந்த ஆலயத்தில் பாதுகாப்புக்காக வரும் பொலிஸார் இவ்வாறு பாதணிகளுடன் நடமாடியது மக்கள் மத்தியில் பெரும் விரக்த்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயம் இராமபிரானால் வழிபட்ட ஆலயமாக திகழ்கின்றது. கடந்தகாலங்களிலும் இவ்வாறு செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு வடபகுதி அரசியல்வாதிகள் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா காலத்திலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் பொலிஸார் பாதணிகளுடன் நடமாடியமை கண்டிக்கத்தக்க விடயமாகும். தேசிய நல் இணக்கம் பேசும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவு இதற்கு நடவடிக்கை எடுக்குமா? எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்