சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்க உத்தேசம்…

பிராந்திய மக்களின் நலன்கருதி , ஆதார வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாமல் அவஸ்தைப்படும்‌ கொரோனா நோயாளர்களில் ஒரு பிரதேச வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்கக்கூடிய அளவு நோயாளர்களை இங்கு தங்கவைத்து சிகிச்சை வழங்கி அவர்களை பாரிய உபாதைகளுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் நோக்கில் முன்னாயத்தம் உத்தேசிக்கப்பட்டுள்ளது என சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனுஸ் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாதாரண வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கிளினிக் மற்றும் விடுதிகளில் அனுமதி என்பன வழமை போன்று ஒரு புறமாக நடைபெற, கொரோனா நோயாளர்களுக்கு அவர்களுக்குரிய கட்டுப்பாடுகளுடன் வேறு பக்கமாகவும் சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் சாய்ந்தமருது வைத்தியசாலையில் இருப்பதும் விஜயம் செய்த சுகாதாரத்துறையினரால் அவதானிக்கப்பட்டது.

இதற்குரிய முன்னெடுப்புகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் .எம்.சி.எம்.மாஹீர் மற்றும் தொற்று நோய்த்தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ரமேஷ் அவர்களின் கண்கானிப்பில் ஏற்பாடாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்