ஒட்டறுத்த குளம் பகுதியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த காட்டுயானை; யானைவேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட ஒட்டறுத்தகுளம் பகுதியில், மக்கள் குடியிருப் பகுதிக்குள் புகுந்த காட்டுயானை, மக்களின் வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகள் பலவற்றையும் சேதாமாக்கியுள்ளது.

குறிப்பாக ஒட்டறுத்த குளத்திற்கு நீர் அருந்துவதற்காக வருகைதந்த காட்டுயானை ஒன்று 11.08.2021இன்று அதிகாலை, ஒட்டறுத்த குளத்தினை அண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிக்கள் புகுந்து தென்னை, மரவள்ளி, வாழை உள்ளிட்ட வாழ்வாதாரப் பயிற்செய்கைகளைச் சேதமாக்கியுள்ளது.

இந் நிலையில் தமது பாதுகாப்பையும், தமது வாழ்வாதார பயிர்ச்செய்கைகளின் பாதுகாப்பினையும் கருத்தில்கொண்டு உரிய அதிகாரிகள் தமது பகுதியில் யானைவேலி அமைத்துத்தர முன்வரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.