முல்லையிலிருந்து மடுவிற்கு பக்தர்கள் யாத்திரை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து மடுமாதா திருத்தலத்திற்கு, பக்தர்கள் பலரும் தலயாத்திரை மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்வாறு யாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ள பக்தர்கள் தற்போதைய கொவிட் – 19 நிலையினைக் கருத்தில்கொண்டு, சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றியே தமது யாத்திரைப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின், இரணைப்பாலை, வண்ணாங்குளம், தீர்த்தக்கரை, முள்ளியவளை, கூழாமுறிப்பு, மாமூலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்வாறு தலயாத்திரை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்