பைசால் காசிம் எம்.பியின் முயற்சியினால் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 70 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு.

முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்களின் முயற்சியினால் சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான  மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை (11) நிந்தவூர் ஆதார  வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனாவின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு  அதிகரித்து வரும்  தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்காக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் சுகாதார அமைச்சரிடம் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து, இவ் உபகரணங்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்