விடுதலைப்புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது சுலபம் என அறிக்கைவிட்டவர்களால், கொவிட் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியவில்லை – தவிசாளர் விஜிந்தன்.

இலங்கையில் கொவிட்தொற்று ஏற்பட்ட ஆரம்பகாலத்தில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் மிகவும் துணிகரமான முறையில் “விடுதலைப்புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்” எனஅறிக்கைகளை வெளியிட்டார்கள்.

ஆனால் தற்போது நாளுக்குநாள் கொவிட்தொற்றினுடைய பாதிப்பும், இறப்பும் மிகவேகமாக அதிகரித்துச்செல்வதுடன்,கொவிட் தொற்றின் தாக்கம் உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. என கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆகஸ்ட்மாத அமர்வு 12.08.2021 நேற்று இடம்பெற்றநிலையில், குறித்த அமர்வின் தலைமையுரையிலேயே அவர் இவ்விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையைப் பொறுத்தவரையிலே அண்மைய நாட்களாக கொரோனாவின் தாண்டவம் உச்சக்கட்டத்தினை அடைந்துள்ளது.

இந் நிலைமையினைக் கருத்தில்கொண்டு நாங்கள் ஒவ்வொருவரும் செயற்படவேண்டிய மிகப் பாரிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது.

நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய சமுதாயத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம்.

கொரோனாவின் தாக்கம் மாத்திரமின்றி, பொருளாதார ரீதியிலும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
நாளுக்குநாள் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக வேகமாக அதிகரித்துச்செல்கின்றது.

மிகவும் வறுமையான சூழலைநோக்கி எங்களுடைய இலங்கைதேசம் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய சுயவிவசாய உற்பத்தியினை மேற்கொள்ளவேண்டிய தேவையில் இருக்கின்றோம்.

இலங்கையில் கொவிட்தொற்று ஏற்பட்ட ஆரம்பகாலத்தில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் மிகவும் துணிகரமான முறையில் “விடுதலைப்புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்” எனஅறிக்கைகளை வெளியிட்டார்கள்.

ஆனால் இன்று நாளுக்குநாள் கொவிட்தொற்றினுடைய பாதிப்பும், இறப்பும் மிகவேகமாக அதிகரித்துச்செல்கின்றது. தற்போது கொவிட்தொற்றின் தாக்கம் உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.

எனவே வெறுமனே அரசை மாத்திரம் குற்றஞ்சாட்டாது, ஒவ்வொரு தனிநபரும் சுய பாதுகாப்பினை ஏற்படுத்துவதன் ஊடாக, கொரோனாவில் இருந்து பாதுகாக்கமுடியும்.

அத்தோடு கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் ஆதனவரி பெறுவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது கொவிட்தொற்று உச்சமடைந்திருப்பதால் அந்த ஆதனவரி பெறுவது தொடர்பிலான பணிகளும் இடைநிறுத்ப்பட்டுள்ளது.

எனவே நாங்கள் தொடர்சியாக எங்களுடைய மக்களைப் பாதுகாக்கும் முகமாகவும், எமது சபையின் வளர்சிநோக்கியும் நாம் தொடர்ந்தும் பயணிக்கவேண்டிய தேவையும் இருக்கின்றது – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்