நெல்லின் விலை அதிகரிக்கப்படவேண்டும்; கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்.

நெல்லின் விலை அதிகரிக்கப்டவேண்டுமென கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆகஸ்ட் மாதத்திற்கன அமர்வில், சபை உறுப்பினர் தவராசா அமலனால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், இத்தீர்மானத்தினை சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.

குறித்த தீர்மானத்தினை சபை உறுப்பினர் த.அமலன் சபையில் சமர்ப்பித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் கிருமிநாசினிகள் தற்போது அதிக விலைகளுக்கு விற்பனைசெய்யப்படுகின்றன. இருப்பினும் விவசாயிகள் அறுவடைசெய்கின்ற நெல்லின் விலை அதிகரிக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.

எனவே இதனைக்கருத்திற்கொண்டு கிருமிநாசினி மற்றும் , உரம் என்பவற்றின் விலைறே்றத்திற்கு ஈடாக நெல்லின் விலையும் அதிகரிக்கப்படவேண்டும். இந்த விடயத்தினை சபையிலே தீர்மானமாக நிறைவேற்றி, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை உரியவர்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்