கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள மத்திய அரசினால் அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் அறிமுகம்…
கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள மத்திய அரசினால் அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் அறிமுகம் – மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் அறிவிப்பு
அம்பாறை மாவட்டத்திலுள்ளவர்கள் 070 6800 368 என்ற இலக்கத்துக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 070 6800 369 என்ற இலக்கத்துக்கும், திருகோணமலை மாவட்டத்திலுள்ளவர்கள் 070 6800 370 என்ற இலக்கத்துக்கும் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய் பற்றிய சகல ஆலோசனைகளையும் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சமூக நல மருத்துவர்கள் மற்றும் வைத்தியர்கள் கடந்த வருடம் முதல் இற்றை வரையான காலம்வரை கொவிட் 19 நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இமியூன் வூஸ்ட்டர் பானங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் வீடு வீடாகச் சென்று வழங்கி வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, தனிமைப்படுத்தலில் இருக்கும் மக்களுக்கும், பாதுகாப்புப் படையினர், பொலிஸார், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டும் வருகின்றன. இந்த நடவடிக்கைகள் கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை