கிண்ணியா நகரசபைக்குற்பட்ட பகுதிக்கு வெளி யூர் வியாபாரிகளுக்கு தற்காலிக தடை.

கொரோனாவின் அபாயத்தை மீண்டும் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் எதிர் கொண்டுள்ளதால் கிண்ணியா நகரசபை தவிசாளர்
எஸ். எச். எம். நழீம்,அதிரடி உத்தரவு ஒன்றை பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் கிண்ணியாவிற்கு வெளியூர் வியாபாரிகள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பொது மக்களுக்கு மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டில் கொரோனா மிக வேகமாக பரவி தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணித்தவர்களின் எண்ணிக்கையும், நாளாந்தம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதன் அபாயத்தை உணர்ந்து பொதுமக்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, உங்களையும், உங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும், பாதுகாத்துக் கொள்ளுமாறு, அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்
எனவே பொதுமக்களாகிய நீங்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடித்து நடக்குமாறும், அவசரத் தேவைகள் இன்றி வெளியில் செல்வதனை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும், பொது இடங்களில் ஒன்று கூடுவதையும், மரண வீடுகளுக்கு செல்வதையும், திருமண வைபவங்கள் மற்றும் இதர வைபவங்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இன்று (18) முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த கடைகளைகளை மூடி, ஒத்துழைப்பு வழங்க கிண்ணியா வர்த்தக சங்கம் ஒப்புதல் வழங்கியதற்கமைய, அனைத்து அத்தியாவசிய பொருட்கள் அற்ற கடைகளும் மூடப்படுவதுடன், தனியார் கல்வி நிர்வானங்கள் எந்த காரணம் கொண்டும் நடைபெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாராந்த சந்தை மற்றும் கருவாட்டு கடைகளை மூடுவதன் முலம் வெளியார் வருகையை கட்டுப்படுத்தலாம் என்பதால் மட்டக்களப்பு பிரதான வீதியில் இருக்கும் அனைத்து கருவாட்டு கடைகளையும் இன்று (18) முதல் மூடப்படும்.
மேலும் வாகனங்களில் கிண்ணியா தவிர்ந்த பிரதேசங்களில் இருந்து அங்காடி வியாபாரம் செய்ய வருபவர்கள் திருப்பி அனுப்ப படுவார்கள் என்பதை அறிய தருகிறேன்.
இத் தீர்மானம் இன்று (18) இருந்து 7 நாட்களுக்கு அமுலில் இருக்கும் நிலைமை சீராகாத விடத்து சுகாதார ஆலோசனைக் கமைய நீடிக்கப்படும் என்பதையும் அறிவிக்கின்றேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.