சம்மாந்துறை ரியல் மெட்ரிக் விளையாட்டு கழக சீருடை அறிமுக நிகழ்வும் வீரர்கள் கௌரவிப்பும் !
சம்மாந்துறை ரியல் மெட்ரிக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் வீரர்கள் கௌரவிப்பும் சம்மாந்துறை தனியார் விடுதியில் ரியல் மெட்ரிக் விளையாட்டுக்கழக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கழக சீருடையை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் மேலும் சட்டத்தரணி ஏ.எம். பிர்னாஸ், சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தலைவரும், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக பிரதானியுமான எம்.எச்.ஏ. காலிதீன், சாய்ந்தமருது கிரிக்கட் சங்க நிர்வாக சபை தவிசாளரும், சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டு கழக உப செயலாளருமான எம்.எஸ்.எம். சியாட் உட்பட கழக வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிரிக்கட் விளையாட்டுக்காக பிராந்தியத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் பலரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.













கருத்துக்களேதுமில்லை